கேரளாவில் இன்று மேலும் 3,404 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,404 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ளது. நாட்டில் மொத்த ஏற்படும் கொரோனா பாதிப்புகளில் கேரளாவின் பங்கு மட்டும் பாதிக்கும் மேல் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே அம்மாநிலத்தில் பிற மாநிலங்களை விட அதிகமாக காணப்படுகிறது.
கேரளாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: - கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,404 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 51,95,997 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 320 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43,946 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,145 ஆகும். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 51,29,044 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 56,580 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 34,171 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story