கொரோனா பாதிப்பு நிலவரம்: மத்திய உள்துறை செயலாளர் ஆய்வு..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 Dec 2021 12:30 AM IST (Updated: 17 Dec 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆய்வு நடத்தினார்.

புதுடெல்லி, 

நாட்டில் 70-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதித்துள்ள நிலையில், நாட்டில் நிலவும் கொரோனா நிலைமையை மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று ஆய்வு செய்தார். 

இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷணும் கலந்து கொண்டார். அதில் நாட்டின் தற்போதைய கொரோனா பரவல் நிலை, தடுப்பூசி நிலவரம் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் கொரோனா சூழ்நிலையை சமாளிக்க அனைத்து யூனியன் பிரதேசங்களின் சுகாதார உள்கட்டமைப்பின் தயார் நிலையும் ஆராயப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Next Story