இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 100- ஐ தாண்டியது- அவசியமற்ற பயணத்தை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்


இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 100- ஐ தாண்டியது- அவசியமற்ற பயணத்தை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 17 Dec 2021 4:38 PM IST (Updated: 17 Dec 2021 4:38 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 32 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை. 

கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான் தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு என பரவியது. நேற்று  வரையில் நாடு முழுவதும் 82 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 101- ஆக உயர்ந்துள்ளது.  அதிகபட்சமாக மராட்டியத்தில் 32, டெல்லி 22, ராஜஸ்தான் 17, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் தலா 8 பேருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மக்கள் அவசியமின்றி பயணிப்பதை தேவையின்றி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

Next Story