லண்டன் செல்ல இருந்த பயணியிடம் இருந்து துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு


லண்டன் செல்ல இருந்த பயணியிடம் இருந்து துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Dec 2021 9:31 PM IST (Updated: 17 Dec 2021 9:31 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் இருந்து லண்டன் செல்ல இருந்த பயணியிடம் இருந்து துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து லண்டனுக்கு   ஏர் இந்தியா விமானம் மூலம் செல்ல இருந்த பயணியிடம் துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டதால் இந்திரா காந்தி சர்வதேச  விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  

விமானத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டது ஆகும்.எனினும்,  அரசின் அனுமதியுடன் சில விதி விலக்குகள் மட்டும் அளிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், இன்று லண்டன் செல்ல இருந்த பயணியிடம் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவரின் உடமையில் இருந்து இரண்டு துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. 

இதையடுத்து, அந்த பயணியை, போலீசாரிடம் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் ஒப்படைத்தனர். அவர் மீது ஆயுத சட்டங்களின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story