கடந்த மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியை கடந்தது


கடந்த மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியை கடந்தது
x
தினத்தந்தி 18 Dec 2021 12:33 AM IST (Updated: 18 Dec 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

கடந்த மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரத்து செய்யப்பட்ட உள்நாட்டு விமான போக்குவரத்து, பின்னர் மே 25-ந்தேதி முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. எனினும் இதில் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டவில்லை.

அதேநேரம் படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் 1.05 கோடி உள்நாட்டு பயணிகள் விமான போக்குவரத்தை பயன்படுத்தி உள்ளனர். இது முந்தைய மாதமான அக்டோபரை (89.85 லட்சம்) ஒப்பிடுகையில், 17.03 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்த பயணிகளில் 54.3 சதவீதத்தினர் அதாவது 57.06 லட்சம் பேர் இண்டிகோ நிறுவனத்தை பயன்படுத்தி உள்ளனர். அடுத்ததாக கோ பர்ஸ்ட் (கோஏர்) நிறுவனம் 11.56 லட்சம் பயணிகளையும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 10.78 லட்சம் பயணிகளையும் (10.3 சதவீதம்) ைகயாண்டுள்ளன.

இந்த தகவல்களை மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

Next Story