ஹெலிகாப்டர் விபத்து; எங்கு தவறு நடந்துள்ளது என ஆராய்ந்து வெளிக் கொண்டு வர வேண்டும்: விமானப்படை தளபதி
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடைபெற்று வருகிறது என விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்தனர்.
ஐதராபாத்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரத்தில் கடந்த 8-ந் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடைபெற்று வருகிறது என விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக முழுமையான விசாரணை முடிவடைவதற்கு முன்னர் எதையும் கூற விரும்பவில்லை. எப்படி தவறு நடந்தது என்பது குறித்து, ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடத்தப்படுவது அவசியம். அதன் மூலம் பொருத்தமான காரணங்களை கண்டறிய வேண்டும்.
விபத்து தொடர்பாக நேர்மையான முறையில் விசாரணை நடக்கிறது என உறுதி அளிக்கிறேன்.குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்திற்கு பிறகு, விவிஐபி.,க்கள் பயணம் தொடர்பான விதிமுறைகள் மறு ஆய்வு செய்யப்படும். விசாரணை அறிக்கை அடிப்படையில் இந்த ஆய்வு இருக்கும்” என்றார்.
Related Tags :
Next Story