ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பிலான கங்கா விரைவுசாலை; அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பிலான கங்கா விரைவுசாலைக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி இன்று நாட்டியுள்ளார்.
ஷாஜகான்பூர்,
உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் கங்கா விரைவுசாலைக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி இன்று நாட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் துறை சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதேபோன்று, ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டமும் நிகழ்ச்சியை காண திரண்டிருந்தது.
அதன்பின் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் முன் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசும்போது, மீரட், ஹாப்பூர், புலந்த்சாகர், அம்ரோகா, சம்பல், படான், ஷாஜகான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கார் மற்றும் பிரயாக்ராஜ் நகரங்களை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
600 கி.மீ. தொலைவுடைய நீண்ட விரைவுசாலைக்காக ரூ.36 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. கங்கா விரைவுசாலை இந்த பகுதியில் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வரும் என அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story