மும்பை: பள்ளி மாணவர்கள் 18 பேருக்கு கொரோனா தொற்று..!
மும்பையில் பள்ளி மாணவர்கள் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் நேவி மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் 18 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கத்தாரில் இருந்து திரும்பி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வரவே, அவரது குடும்பத்திற்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மகனுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரின் மகன் படிக்கும் பள்ளியில் அவனுடன் தொடர்பில் இருந்த 7 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் பள்ளியில் உள்ள 650 மாணவர்களுக்கு மொத்தமாக கொரோனா பரிசோதனை நடத்தியுள்ளது.
இந்த பரிசோதனையில் அந்த 7 மாணவர்களையும் சேர்த்து மொத்தம் 18 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story