இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 112 ஆக உயர்வு


இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 112 ஆக உயர்வு
x
தினத்தந்தி 18 Dec 2021 7:23 PM IST (Updated: 18 Dec 2021 7:23 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்புக்கான மொத்த எண்ணிக்கை 112 ஆக உயர்வடைந்து உள்ளது.



புதுடெல்லி,

இந்தியாவில், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டதும், ஊரடங்கு நடவடிக்கைகளை அரசு அமல்படுத்தியது.  எனினும், முதல் அலையை விட நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட 2வது அலையில், பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிக உச்சம் தொட்டது.  இதற்கு டெல்டா வகை கொரோனா காரணம் என கூறப்பட்டது.  2வது அலை நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது.

அதன்பின்னர் டெல்டா பிளஸ் உள்ளிட்ட கொரோனா வகைகள் கண்டறியப்பட்டாலும் இந்தியாவில் பெரும் தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை.  சமீப நாட்களாக நாடு முழுவதும் பாதிப்புகள் குறைந்து வருகின்றன.  இந்நிலையில், கொரோனாவின் ஒமைக்ரான் வகை பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நாட்டில் இதுவரை, 112 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இவற்றில் மராட்டியம் 40, டெல்லி 22, ராஜஸ்தான் 17, கர்நாடகா 8, தெலுங்கானா 8, குஜராத் 5, தமிழகம் 1, ஆந்திர பிரதேசம் 1, சண்டிகார் 1, மேற்கு வங்காளம் 1 என ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.



Next Story