5 மாதங்களில் இல்லாத அளவில் டெல்லியில் மீண்டும் தலை தூக்கிய கொரோனா...!
டெல்லியில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று 86 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த வியாழக்கிழமை 85 பேருக்கும், வெள்ளிக்கிழமை 69 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று 86 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,42,090 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.13 சதவிகிதம்.
மேலும் 68 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. இதுவரை மொத்தம் 14,16,506 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 25,100 ஆக உள்ளது.
டெல்லியில் ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது டெல்லிவாசிகளிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லிவாசிகள் ஏற்கனவே காற்று மாசு, ஒமைக்ரான் பாதிப்பு என்று இருந்து வரும் நிலையில் தற்போது கொரோனா மீண்டும் அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 22 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story