இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 143 ஆக உயர்வு
நாட்டின் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 143 ஆக உயர்ந்து விட்டது.
புதுடெல்லி,
கொரோனாவை தொடர்ந்து அதன் உருமாறிய வடிவமான ஒமைக்ரானும் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கால் பதித்துள்ள இந்த வைரஸ் நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தொடர்ந்து பரவி வருகிறது.
அந்தவகையில் நேற்று முன்தினம் வரை தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 113 பேர் ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகி இருந்தனர்.
இந்தநிலையில் தெலுங்கானாவில் 12 பேர், மராட்டியத்தில் 8 பேர், கர்நாடகாவில் 6 பேர், கேரளாவில் 4 பேர் என நேற்றும் 30 பேர் புதிதாக ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 143 ஆக உயர்ந்து விட்டது.
கேரளாவில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் இருவர் திருவனந்தபுரத்தையும், ஒருவர் மலப்புரத்தையும், மற்றொருவர் திருச்சூரையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதற்கிடையே, நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story