கொல்கத்தா மாநகராட்சி வார்டு தேர்தல்: வாக்குச்சாவடி மீது குண்டு வீச்சு
கொல்கத்தா மாநகராட்சியில் உள்ள (கேஎம்சி) 144 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
கொல்கத்தா,
கொல்கத்தா மாநகராட்சியில் உள்ள (கேஎம்சி) 144 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடைபெற்று வருகிறது.
4,959 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது, மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
நகரம் முழுவதும் சுமார் 23,000 கொல்கத்தா காவல்துறையின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் திரிணாமூல் காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதனிடையே, இன்று காலை 11 மணியளவில் செல்டாஹ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் வாக்காளர்கள் 3 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது, “ இரண்டு குண்டுகள் வீசப்பட்டன. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்” எனக்கூறினர்.
இதையடுத்து குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.
Related Tags :
Next Story