நாட்டில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 137.46 கோடியாக உயர்வு


நாட்டில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 137.46 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 19 Dec 2021 3:56 PM IST (Updated: 19 Dec 2021 3:56 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை 137.46 கோடியை கடந்துள்ளது.



புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  பொதுமக்களும் அதற்கான முகாம்களில் ஆர்வமுடன் கலந்து கொண்டு வருகின்றனர்.

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தி உள்ளது.  இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 137,46,13,252 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, கடந்த 24 மணிநேரத்தில் 76,54,466 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 7,081 பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன.  இதனால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 83,913 ஆக உள்ளது.

கடந்த 1.5 ஆண்டுகளில் இது மிக குறைவாகும்.  570 நாட்களில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிக குறைந்த அளவில் உள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story