அந்தமான் நிக்கோபார் தீவுகள்: 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி சாதனை..!
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது.
போர்ட் பிலெய்ர்,
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீத இலக்கை கடந்து அந்தமான் நிக்கோபார் தீவுகள் சாதனை படைத்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியை மட்டும் செலுத்தி 100 இலக்கை அடைந்த இந்தியாவின் முதல் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம் என்ற பெருமையையும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் பெற்றுள்ளது.
இந்தாண்டு ஜனவரி மாதத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்பட்டது. 2.86 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இலக்கு நிர்ணயித்திருந்தது.
இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியை மட்டும் பயன்படுத்தி 2.87 லட்சம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி அந்தமான் நிக்கோபார் தீவுகள் 100 சதவீத இலக்கை கடந்துள்ளது.
இதுவரை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள மக்கள் தொகையில் 74.67 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story