கோவா மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது- பிரதமர் மோடி
நிர்வாகம், தனிநபர் வருமானம், தடுப்பூசி, உணவு பாதுகாப்பு, திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாநிலை ஆகியவற்றில் கோவா முன்னுதாரணமாக திகழ்கிறது என பிரதமர் மோடி பேசினார்.
பானஜி,
கோவா மாநிலத்தின் விடுதலை தினத்தை முன்னிட்டு அங்கு இன்று நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்கபல் கோவா சென்றார். அங்கு கோவா விடுதலைக்காக போராடிய தியாகிகளின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஷியாம் பிரசாத் முகர்ஜி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவா சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு விருது வழங்கி பிரதமர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
நாட்டின் பிற பகுதிகள் மொகலாயர்கள் வசம் இருந்த போது கோவா மாநிலம் போர்ச்சுகல் ஆட்சியின் கீழ் இருந்தது. பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் கோவா இந்தியாவை மறக்கவில்லை. இந்தியா கோவாவை மறக்கவில்லை.
நான் இத்தாலி சென்றிருந்தபோது வாடிகன் நகரில் போப் பிரான்சிசை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்தியாவிற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தேன். அப்போது போப் பிரான்சிஸ் சொன்னார், இது எனக்கு நீங்கள் அளித்துள்ள மிகச்சிறந்த பரிசு என்று. இது இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் நமது ஜனநாயகத்தின் மீதான அவரது அன்பை வெளிப்படுத்துகிறது.
கொரோனா தடுப்பூசி திட்டத்தை கோவா மாநிலம் முழுமையாக செயல்படுத்தி உள்ளது. தகுதி வாய்ந்த அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்காக நான் கோவா மாநிலத்தை பாராட்டுகிறேன். பல்வேறு அம்சங்களில் கோவா மாநிலம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. நிர்வாகம், தனிநபர் வருமானம், தடுப்பூசி, உணவு பாதுகாப்பு, திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாநிலை ஆகியவற்றில் கோவா முன்னுதாரணமாக திகழ்கிறது” என்றார்.
Related Tags :
Next Story