அம்பேத்கரை மறைவுக்குப் பின்னரும் காங்கிரஸ் அவமதித்து வருகிறது - அமித்ஷா பேச்சு
அம்பேத்கரை அவரது வாழ்நாளிலும், மறைவுக்குப் பின்னரும் காங்கிரஸ் அவமதித்து வருகிறது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
புனே,
புனேவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-
அம்பேத்கரை அவரது வாழ்நாளிலும், மறைவுக்குப் பின்னரும் காங்கிரஸ் அவமதித்து வருகிறது. காங்கிரஸ் அல்லாத ஆட்சியில் தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது. பிரதமர் மோடி ஆட்சியில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
முதல்-மந்திரி தாக்கரேவின் உடல்நிலை சரியில்லை, கடவுள் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும்.
மகா விகாஸ் அகாடி அரசு 3 சக்கர வாகனத்தைப்போன்றது. அதன் மூன்று டயர்கள் வெவ்வேறு திசைகளில் சென்று அடைத்து டயர்களும் பஞ்சர் ஆகிவிட்டன. இது இயங்கவில்லை, மாசுவை மட்டுமே ஏற்படுத்துகிறது என்றார்.
Related Tags :
Next Story