குளிர்காலத்தையொட்டி வருகிற 24-ந் தேதி முதல் கர்நாடக ஐகோர்ட்டுக்கு 9 நாட்கள் விடுமுறை
குளிர்காலத்தையொட்டி வருகிற 24-ந் தேதி முதல் கர்நாடக ஐகோர்ட்டுக்கு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக ஐகோர்ட்டுக்கு வருகிற 24-ந் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 1-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதாவது 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி உத்தரவின் பேரில், கர்நாடக ஐகோர்ட்டு பதிவாளர் பரத்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குளிர்காலத்தையொட்டி கர்நாடக ஐகோர்ட்டுக்கு வருகிற 24-ந் தேதியில் இருந்து ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல், தார்வார் ஐகோர்ட்டு கிளை, கலபுரகி ஐகோர்ட்டு கிளைக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக பரத்குமார் தெரிவித்துள்ளார்.
கா்நாடக ஐகோர்ட்டுக்கும், ஐகோர்ட்டு கிளைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தாலும், விடுமுறை கால அமர்வு முன்பாக அவசர வழக்குகள் குறித்து விசாரணை நடைபெறும் என்றும் ஐகோர்ட்டு பதிவாளர் பரத்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருக்கிறார்.
Related Tags :
Next Story