பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.400 கோடி மதிப்பிலான ஹெராயின்: இந்திய கடற்படை பறிமுதல்..!
பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 400 கோடி மதிப்பிலான ஹெராயினை இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
குஜராத் ,
பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 77 கிலோ ஹெராயின் போதைப் பொருட்களை குஜராத் கடற்படைப் பாதுகாப்புப்படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
குஜராத் கடலோர காவல் படையினரும், குஜராத் தீவிரவாதத் தடுப்புப் படையினரும் இணைந்து நேற்று கடற்பகுதிக்குள் ரோந்து சென்றனர். அப்போது, அல் ஹூசைனி என்ற பெயருடைய படகு குஜராத் கடற்பகுதிக்குள் வருவதைப் கடலோர பாதுகாப்புப்படையினர் பார்த்தனர்.
இதையடுத்து, அந்தப் படகை சுற்றி வளைத்த கடலோர பாதுாப்பு படையினர், தீவிரவாத தடுப்புப்படையினர் அந்த படகை ஆய்வு செய்தனர். அந்தப் படகில் பாகிஸ்தானைச் சேர்ந்த 6 பேர் இருந்தனர் அதில் 77 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்தது. அது சுமார் 400 கோடி மதிப்பிலானதாகும்.இதையடுத்து படகில் இருந்த 6 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Related Tags :
Next Story