வாலிபரை தாக்கிய காட்டு யானை..! பதற வைக்கும் வீடியோ..!


வாலிபரை தாக்கிய காட்டு யானை..! பதற வைக்கும் வீடியோ..!
x
தினத்தந்தி 20 Dec 2021 10:48 AM IST (Updated: 20 Dec 2021 10:48 AM IST)
t-max-icont-min-icon

அசாம் மாநிலத்தில் வாலிபரை காட்டு யானை தாக்கிய வீடியோ பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

திஸ்பூர்,

அசாம் மாநிலத்தில் வாலிபர் ஒருவரை காட்டு யானை தாக்கிய வீடியோ பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது. அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் உள்ள தமர்ஹட் கிராமத்தில் நேற்று முன்தினம் காட்டு யானை 30-வயது நபர் ஒருவரை துரத்திச் சென்றுள்ளது.

யானை துரத்தியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அந்த வாலிபரை, யானை தனது தும்பிக்கையால் பயங்கரமாக தாக்கியது. இதனால் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அந்த யானை காட்டுப் பகுதியை நோக்கி துரத்தப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காட்டு யானை வாலிபரை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story