திருமணம் செய்வதாக கூறி பெண் மருத்துவரிடம் 20 லட்சம் மோசடி- வாலிபர் கைது


திருமணம் செய்வதாக கூறி பெண் மருத்துவரிடம் 20 லட்சம் மோசடி- வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Dec 2021 11:11 AM IST (Updated: 20 Dec 2021 11:11 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்த 25 வயது இளைஞரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.

அந்தேரி,

அந்தேரியைச் சேர்ந்த 31 வயதான மருத்துவர் ஒருவர் தனது திருமணத்திற்கு வரன் பார்ப்பதற்காக மேட்ரிமோனியல் தளத்தில் பதிவு செய்துள்ளார். அப்போது மேட்ரிமோனியல் தளத்தில் அவருக்கு க்ஷிதிஜ் தேசாய் என்ற நபரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

க்ஷிதிஜ் தேசாய் முதலில் பெண் மருத்துவரை அணுகி  அவளிடம் பேச ஆரம்பித்துள்ளார். சில நாட்கள் அவர்கள் இருவரும் உரையாடியுள்ளனர். க்ஷிதிஜ் தேசாய்  முதலில் தன்னை குஜராத்தைச் சேர்ந்த பங்குத் தரகர் என்று தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 20 தினங்களுக்கு முன்  க்ஷிதிஜ் தேசாய் அந்த பெண் மருத்துவரிடம் 20 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் எதிர்காலத்திற்காக பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறினார். அதன் பிறகு அவர் மாயமாகியுள்ளார்.

இது ,குறித்து அந்த பெண் மருத்துவர்  மும்பை காவல்துறை இடம் புகார் அளித்துள்ளார். விசாரணையை தீவிர படுத்திய காவல்துறையினர் க்ஷிதிஜ் தேசாயை கைது செய்தனர். விசாரணையில் அவரது உண்மையான பெயர் சூரின் சோலங்கி என போலீசார் கண்டு பிடித்தனர். தற்போது அவரிடம் அடுத்த கட்ட விசாரணை நடந்து வருகிறது.

Next Story