நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
x
தினத்தந்தி 20 Dec 2021 11:58 AM IST (Updated: 20 Dec 2021 11:58 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் முடிய 4 நாள்களே உள்ள நிலையில் மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் முடிய  4 நாள்களே உள்ள நிலையில் மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். 

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 23 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை விவாதிக்கக் கோரி தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் முடங்கி வருகின்றன. 

இந்நிலையில், இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டிய மசோதாக்கள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல், பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story