கிதம்பியின் வரலாற்று வெற்றி பிற வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும்; பிரதமர் மோடி டுவிட்
கிதம்பி வெள்ளி பதக்கம் வென்று வரலாறு படைத்தது பிற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
26-வது உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் ஸ்பெயின் நாட்டில் உள்ள வெல்வா நகரில் நடைபெற்றன. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்திய வீரர் கிதம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூ ஆகியோர் நேற்று விளையாடினர்.
இந்த போட்டியில், கியான் 21.15, 22-20 என்ற செட் கணக்கில் கிதம்பியை வீழ்த்தி பட்டம் வென்றார். இந்த போட்டி 43 நிமிடங்கள் நீடித்தது. இதனால், 2வது இடம் பிடித்த இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்து உள்ளது. உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற முதல் வீரர் என்ற பெருமையை கிதம்பி பெற்றுள்ளார்.
அவரது வெற்றி வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ள கிதம்பி ஸ்ரீகாந்துக்கு என்னுடைய வாழ்த்துகள். அவருடைய வெற்றி பிற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும். பேட்மிண்டனிலும் ஆர்வம் ஏற்படுத்த செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story