கொல்கத்தா மாநகராட்சி தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி; பல இடங்களில் முன்னிலை


கொல்கத்தா மாநகராட்சி தேர்தல்:  திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி; பல இடங்களில் முன்னிலை
x
தினத்தந்தி 21 Dec 2021 6:39 AM GMT (Updated: 21 Dec 2021 10:51 AM GMT)

கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 7ல் வெற்றியும், 108ல் முன்னிலையும் பெற்றுள்ளது.


கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் கடந்த 19ந்தேதி நடந்து முடிந்தது.  இதில் 63% ஓட்டுகள் பதிவாகி இருந்தன.  அதன் முடிவுகளை மேற்கு வங்காள தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டு வருகிறது.

இதன்படி, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.  இதுதவிர, 108 தொகுதிகளில் முன்னிலையும் பெற்றுள்ளது.  பா.ஜ.க. 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், மற்றவை 3 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

மொத்தம் 144 இடங்களை கொண்ட கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் 133 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.  தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெறும் நோக்கில் அக்கட்சி உள்ளது.


Next Story