நாடாளுமன்றத்திற்கு நேற்று வந்த எம்.பி.க்கு இன்று கொரோனா உறுதி...
நாடாளுமன்றத்திற்கு நேற்று வருகை தந்த மக்களவை எம்.பி.க்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தொடர் வருகிற 23ந்தேதி நிறைவடைகிறது. மக்களவை இன்று கூடிய பின்பு, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியால், மதியம் 2 மணிவரையும், பின்னர் நாளை வரையும் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மக்களவை எம்.பி. குன்வர் டேனிஷ் அலிக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி எம்.பி. குன்வர் டேனிஷ் அலி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், முழு அளவில் தடுப்பூசி செலுத்திய பின்னரும் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்திற்கு நேற்று நான் வருகை புரிந்தேன்.
அதனால், என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொண்டு, தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன். எனக்கு லேசான அறிகுறிகள் காணப்படுகின்றன. விரைவில் நலமடைந்து திரும்புவேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story