அரசின் கைப்பாவையாக இருக்காதீர்கள் - பத்திரிக்கையாளர்களிடம் சாடிய ராகுல் காந்தி


அரசின் கைப்பாவையாக இருக்காதீர்கள் - பத்திரிக்கையாளர்களிடம் சாடிய ராகுல் காந்தி
x
தினத்தந்தி 21 Dec 2021 4:53 PM IST (Updated: 21 Dec 2021 4:53 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாபில் இரண்டு நபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பியதால் பத்திரிக்கையாளர்களிடம் ராகுல்காந்தி கோபமடைந்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 2014-ம் ஆண்டுக்கு முன்னர் 'அடித்துக்கொலை’ என்ற வார்த்தையை கேள்விபட்டதே கிடையாது. நன்றி மோடிஜி’ என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், லகீம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய இணை மந்திரி அமித் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தில் பேரணி நடத்தினர்.

இந்த பேரணிக்கு பின்னர் எதிர்க்கட்சிகள் கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். 

அப்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தியிடம், பஞ்சாப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொற்கோவிலில் நபர் அடித்துக்கொலை மற்றும் சீக்கிய கொடியை அவமதித்ததாக நபர் அடித்துக்கொலை என இரு கொலை சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், அவர் இன்று வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவு குறித்தும் கேள்வி எழுப்பினர்.

இதனால், ஆத்திரமடைந்த ராகுல்காந்தி பத்திரிக்கையாளர்களை நோக்கி, அரசின் கைப்பாவையாக இருக்காதீர்கள். பிரச்சினையை திசை திருப்பாதீர்கள்’ என்று காட்டமாக கூறினார்.

Next Story