மராட்டியத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் - மொத்த பாதிப்பு 65 ஆக உயர்வு


மராட்டியத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் - மொத்த பாதிப்பு 65 ஆக உயர்வு
x
தினத்தந்தி 21 Dec 2021 8:34 PM IST (Updated: 21 Dec 2021 8:34 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகளில் வேகமாக தடம் பதித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 2 ஆம் தேதி முதன் முதலாக ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. 

ஒமைக்ரன் பரவலால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். 

இந்த நிலையில்,  மராட்டிய மாநிலத்தில் மேலும் 11- பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.   


Next Story