மேகதாது திட்டத்தை அமல்படுத்துவது உறுதி - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்


மேகதாது திட்டத்தை அமல்படுத்துவது உறுதி - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்
x
தினத்தந்தி 22 Dec 2021 3:22 AM IST (Updated: 22 Dec 2021 3:22 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மேகதாது திட்டத்தை அமல்படுத்த அரசு உறுதியாக உள்ளதாக சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று மேகதாது திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என சுயேச்சை எம்.எல்.ஏ. சரத் பச்சேகவுடா கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளித்து பேசியதாவது:-

மேகதாது திட்டத்தை செயல்படுத்த அரசு உறுதியாக உள்ளது. ரூ.9 ஆயிரம் கோடியில் 67.16 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கொள்ளளவு கொண்ட அணையை கட்ட திட்டமிட்டுள்ளோம். 

இந்த திட்டத்திற்கு காவிரி நிர்வாக ஆணையத்தின் அனுமதியை கேட்டுள்ளோம். திட்ட அறிக்கையை அந்த ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளோம். அதேபோல் மத்திய நீர் ஆணையம், சுற்றுச்சூழல்-வனத்துறையின் ஒப்புதல் பெற முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

காவிரி நிர்வாக ஆணையத்தின் ஒப்புதலை பெற்றவுடன் மேகதாது திட்டத்தை தொடங்குவோம். நாங்கள் ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.இந்த விஷயத்தில் நாங்கள் அமைதியாக இருக்கவில்லை. தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story