நடுவானில் பாதையை மாற்றும் திறன் கொண்ட ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை
அதிநவீன ஏவுணையான ப்ரலே இடைமறிக்கும் ஏவுகணைகளை முறியடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நடு வானில் பாதையை மாற்றி செல்லும் திறன் கொண்ட ’ப்ரலே’ என்ற ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து இன்று காலை 10.30 மணியளவில் இந்த ஏவுகணை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த ஏவுகணை நிர்ணையிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது. அதிநவீன ஏவுணையான ப்ரலே இடைமறிக்கும் ஏவுகணைகளை முறியடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தொலைவு சென்ற பிறகு நடுவானில் தனது பாதையை மாற்றி செல்லும் திறன் கொண்டது இந்த பாலிஸ்டிக் ரக ஏவுகணை என இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story