தேசிய பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் - காங்கிரஸ் எம்.பிக்களுக்கு சோனியாகாந்தி அறிவுறுத்தல்

தேசிய பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் - காங்கிரஸ் எம்.பிக்களுக்கு சோனியாகாந்தி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 22 Dec 2021 3:55 PM IST (Updated: 22 Dec 2021 3:55 PM IST)
t-max-icont-min-icon

தேசிய பிரச்சினைகளை அந்தந்த தொகுதிகளில் உள்ள மக்களிடம் கொண்டு செல்லுமாறும் எம்.பி.க்களை சோனியா காந்தி கேட்டுக் கொண்டார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கிய நிலையில் அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே இன்று நிறைவு பெற்றதாக இரு சபை தலைவர்கள் அறிவித்தனர்.

கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும் மசோதா, தேர்தல் சட்டத் திருத்த மசோதா, பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட், லக்கிம்பூர் விவகாரம், தேர்தல் திருத்த மசோதா, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பிரச்சினைகளை கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை  நாடாளுமன்றத்தில் அக்கட்சியின் மக்களவை எம்.பி.க்களை சந்தித்துப் பேசினார்.

குளிர்கால கூட்டத்தொடரின் போது எம்.பி.க்கள் முன்னெடுத்துப் பேசிய பிரச்சினைகள் குறித்தும் அவர்களுடன் விவாதிக்கப்பட்டது. 

தேசிய பிரச்சினைகளை அந்தந்த தொகுதிகளில் உள்ள மக்களிடம் கொண்டு செல்லுமாறும் எம்.பி.க்களை சோனியா காந்தி கேட்டுக் கொண்டார்.

Next Story