கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதாவுக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம்
பெங்களூருவில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் இன்று மதமாற்ற தடை மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாகவும், இதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறி வந்தார். பெலகாவி சுவர்ணசவுதாவில் நடைபெறும் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதிப்பட கூறினார்.
அதன்படி கர்நாடக மந்திரிசபை கூட்டம் நேற்று முன்தினம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெலகாவியில் நடைபெற்றது.இதில் கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் நோக்கத்தில் கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மசோதா 22-ந் தேதி (நேற்று) தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், இன்று பெங்களூருவில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் இன்று மதமாற்ற தடை மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற பெங்களூரு ஆர்ச் பிஷப் பீட்டர் மசோடா கூறுகையில்,
“ இங்கு போராட்டம் நடத்தும் கூட்டம் கிறிஸ்தவ குழுக்கள் கிடையாது. கிறிஸ்தவர்கள் எந்த ஒரு பேரணிக்கும் இன்று ஏற்பாடு செய்யவில்லை. நாங்கள் இதற்கு முன்பு அரசை அணுகினோம். ஆனால், எங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை. ஆனால் தற்போது இந்த மசோதாவில் உள்ள அம்சங்களை பிற தரப்பினரும் படித்தனர், இந்த சட்டம் கிறிஸ்தவர்களை மட்டும் பாதிக்காது, பெரும்பான்மையான சமூகத்தை பாதிக்கும்” என்றார்.
Related Tags :
Next Story