கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு


கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 Dec 2021 6:40 PM IST (Updated: 22 Dec 2021 6:40 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் தொற்று பாதிப்பைக் கண்டறிய 56,388- மாதிரிகள் கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம்

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களாக  தினசரி தொற்று பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழ் இருந்தது. இந்த நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கேரளாவில் ஒருநாள் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

கேரள சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின் படி, “ கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,205- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை  52,13,943- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 383- பேர் உயிரிழப்பு இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  45,538- ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பைக் கண்டறிய 56,388- மாதிரிகள் இன்று பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்றில் இருந்து மேலும் 3,102 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 51,51,715 -ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 27,842-ஆக குறைந்துள்ளது.  மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Next Story