அயோத்தி ராமர் கோவில் கட்ட வசூலிக்கப்பட்ட பணத்தில் மோசடி - பிரியங்கா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு


அயோத்தி ராமர் கோவில் கட்ட வசூலிக்கப்பட்ட பணத்தில் மோசடி - பிரியங்கா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 Dec 2021 2:08 PM IST (Updated: 23 Dec 2021 2:21 PM IST)
t-max-icont-min-icon

அயோத்தி ராமர் கோவில் கட்ட வசூலிக்கப்பட்ட பணத்தில் மோசடி நடந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அயோத்தி ராமர் கோவில் கட்ட வசூலிக்கப்பட்ட பணத்தில் மோசடி நடந்துள்ளது.  ராமர் கோவில் அறக்கட்டளைக்கு குறைந்த மதிப்புடைய நிலங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடுகிறோம் என்று அம்மாநில அரசு கூறுகிறது.

அதை விசாரிப்பது யார்? மாவட்ட அலுவலர் நிலை அலுவலர்கள் தான் மாவட்ட அதிகாரிகள் மட்டத்தில் தான் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் ராம் மந்திர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.

எனவே, இதை சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்க வேண்டும் என கூறினார். 

Next Story