தேர்தலை நடத்துவதில் மாநில தேர்தல் ஆணையமும், போலீசாரும் சிறப்பாக செயல்பட்டனர் - மம்தா புகழாரம்
தேர்தலை அமைதியாக நடத்துவதில் மாநில தேர்தல் ஆணையமும், போலீசாரும் சிறப்பாக செயல்பட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
கொல்கத்தா,
மேற்குவங்காள மாநிலத்தில் கொல்கத்தா மாநகராட்சியில் உள்ள 144 வார்டுகளுக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. திரிணாமுல் காங்கிரஸ், பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த செவ்வாய்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில், மொத்தமுள்ள 144 வார்டுகளில் 134 வார்டுகளை கைப்பற்றி கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் வார்டு கவுன்சிலர்களுடன் அக்கட்சியின் தலைவரும், மேற்குவங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி இன்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய மம்தா, தேர்தலை அமைதியாக நடத்துவதில் மாநில தேர்தல் ஆணையமும், போலீசாரும் சிறப்பாக செயல்பட்டனர். கொல்கத்தா மாநகராட்சியின் செயல்பாடுகள் 6 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படும். யாரேனும் வேலை செய்யவில்லை என்றால் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்றார்.
Related Tags :
Next Story