மனைவி, மகளுக்கு கொரோனா: அகிலேஷ் யாதவ் தனிமைப்படுத்திக் கொண்டார்


மனைவி, மகளுக்கு கொரோனா: அகிலேஷ் யாதவ் தனிமைப்படுத்திக் கொண்டார்
x
தினத்தந்தி 24 Dec 2021 12:57 AM IST (Updated: 24 Dec 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

மனைவி, மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அகிலேஷ் யாதவ் தனிமைப்படுத்திக் கொண்டார்.

லக்னோ,

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவிற்கும், மகள் டீனாவிற்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.

இதை அகிலேஷ் யாதவ் டுவிட்டர் பதிவில் வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில் “எனது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் என்னால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.” என்று கூறி உள்ளார். இதையடுத்து அகிலேஷ் யாதவும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார்.


Next Story