இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திருப்பதியில் சாமி தரிசனம்
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினருடன் இன்று திருப்பதி ஏழுமைலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி,
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, திருப்பதி வெங்கடாசலபதி பக்தர். அவ்வப்போது இங்கு வந்து வழிபடுவது அவரது வழக்கம். அந்தவகையில் திருப்பதி கோவிலுக்கு 2 நாள் பயணமாக நேற்று (வியாழக்கிழமை) மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார்.
திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய ராஜபக்சே, குடும்பத்தினருடன் இன்று சாமி தரிசனம் செய்தார். திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ராஜபக்சே வருகையயொட்டி திருப்பதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story