முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் `கேவியட்' மனு தாக்கல்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் இருந்து 3 கோடி ரூபாய் பெற்று, பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக முன்னாள் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை சென்னை ஐகோர்ட்டு கடந்த 17-ந்தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்தநிலையில், இந்த வழக்கில் தனது தரப்பு கருத்தை கேட்காமல் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என தெரிவித்து, புகார்தாரர் விஜய் நல்லதம்பி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் பி.சோமசுந்தரம் `கேவியட்' மனு தாக்கல் செய்துள்ளார்.
Related Tags :
Next Story