பஞ்சாப்; புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ளதா விவசாய சங்கங்கள்..!


பஞ்சாப்; புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ளதா விவசாய சங்கங்கள்..!
x
தினத்தந்தி 25 Dec 2021 7:01 AM IST (Updated: 25 Dec 2021 7:01 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப்பில் இருக்கும் 32 விவசாய சங்கங்களில் 25 சங்கங்கள் இந்த புதிய கட்சியில் அங்கம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சண்டிகர்,

தலைநகர் புதுடெல்லியை ஒட்டியுள்ள எல்லை பகுதிகளில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த விவசாயிகளின் மாபெரும் போராட்டம் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து போராட்ட குழுவின் முக்கிய அங்கமாக செயல்பட்ட பஞ்சாப் மாநில சம்யுக்தா கிசான் மோர்ச்சா(எஸ் கே எம்) அமைப்பின் சார்பில் புதிய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

பஞ்சாப்பில் இருக்கும் 32 விவசாய சங்கங்களில் 25 சங்கங்கள் இந்த புதிய கட்சியில் அங்கம் வகிக்கும் என்றும், பிற அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் விவசாய சங்கங்கள் இந்த புதிய அரசியல் கட்சியில் அங்கம் வகிக்காது என்றும் அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இது குறித்து கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த புதிய அரசியல் கட்சி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பின் 5 பேர் கொண்ட முக்கிய குழுவில் ஒருவராக அங்கம் வகிக்கும் குர்நாம் சிங் சதுனி, தனது புதிய அரசியல் கட்சியான சம்யுக்தா சங்கர்ஷ் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story