திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் கொலை - 3 திருமணமானவர் வெறிச்செயல்
திருமணத்திற்கு மறுத்ததால் 25 வயது இளம்பெண்ணை 36 வயதான டாக்சி டிரைவர் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
குருகிராம்,
மேற்குவங்காளத்தை சேர்ந்தவர் ஷபிகுல் இஸ்லாம். டாக்சி டிரைவரான இவருக்கு மூன்று திருமணங்கள் நடைபெற்றுள்ளது. ஷபிகுல் இஸ்லாம் தனது மூன்றாவது மனைவியுடன் அரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வந்துள்ளார்.
இதற்கிடையில், ஷபிகுலுக்கு குருகிராமில் அவர் வசித்து வந்த பகுதியை சேர்ந்த 25 வயதான நர்ஹிஸ் ஹடூன் என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடவைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதி பால் வாங்க சென்ற நர்ஹிஸ் வீடு திரும்பவில்லை. இதனால், பதற்றமடைந்த நர்ஹிஸின் தந்தை தனது மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் செப்டம்பர் 23-ம் தேதி தெற்கு நகர் - 1 மாவட்டத்தில் நர்ஹிஸ் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், நர்ஹிஸ் கடைசியாக ஒரு டாக்சியில் ஏறிச்சென்றது தெரியவந்தது. அந்த டாக்சி எண் உள்ளிட்டவற்றை வைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த டாக்சியை ஷபிகுல் இஸ்லாம் ஓட்டிச்சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து, அவரை போலீசார் தேடிய நிலையில் ஷபிகுல் இஸ்லாம் குருகிராமில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால், தனிப்படை அமைக்கப்பட்டு ஷபிகுல்லை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், மேற்குவங்காள மாநிலம் புல்வாரி சவுக் பகுதியில் இந்தியா வங்காளதேசத்தின் சர்வதேச எல்லைப்பகுதியில் பதுங்கி இருந்த இஸ்லாம் ஷபிகுல்லை குருகிரான் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஷபிகுல்லிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஷபிகுல் இஸ்லாமுக்கு ஏற்கனவே 3 முறை திருமணமானது தெரியவந்தது. மேலும், இளம்பெண்ணான நர்ஹிஸ் ஹடூனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ஷபிகுல் கேட்டுள்ளார்.
ஆனால், தன்னை திருமணம் செய்த நர்ஹிஸ் மறுத்ததையடுத்து அவரை கொலை செய்ததுவிட்டு குருகிராமில் இருந்து மேற்குவங்காளத்திற்கு வந்துவிட்டதாக போலீசாரிடம் ஷபிகுல் இஸ்லாம் தெரிவித்தார். மேலும், மேற்குவங்காளத்தில் இருந்து சர்வதேச எல்லை வழியாக வங்காளதேசத்திற்குள் செல்ல திட்டமிட்டிருந்ததாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஷபிகுலிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story