ஒமைக்ரான் எதிரொலி: மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Dec 2021 4:31 PM IST (Updated: 25 Dec 2021 4:31 PM IST)
t-max-icont-min-icon

ஓமைக்ரான் அச்சம் காரணமாக மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

நாட்டில் கொரோனா தொற்று பரவல் சில மாதங்களாக குறைந்து வரும் நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான் என்ற புதிய வகை தொற்றானது உலகமெங்கும் பரவி வருகிறது. 

இது இந்தியாவின் பல மாநிலங்களிலும் வேகமாக பரவி வருவதால், தடுப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு சில மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், மாநிலத்தில் அதிகரித்து வரும் ஓமிக்ரான் மற்றும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆணையர் இக்பால் சிங் சாஹல் பிறப்பித்த உத்தரவில், மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள எல்லைப்புறங்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள்,விழா, கூட்டம், ஆகிய செயல்பாடுகள் திறந்தவெளியிலோ, அல்லது மூடப்பட்ட உள் அரங்கத்திலோ நடைபெறுவது தடை செய்யப்படுகிறது.

இந்த உத்தரவு டிசம்பர் 25ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story