ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் - தேவஸ்தானம் அறிவிப்பு

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் -  தேவஸ்தானம் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Dec 2021 12:31 AM IST (Updated: 26 Dec 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் - தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை, 

கொரோனாவை தொடர்ந்து தற்போது அதன் திரிபான ஒமைக்ரான் தொற்றும் வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் திருப்பதியில் ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. இதன்படி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் மற்றும் இதர வேலையாக திருமலைக்கு வருவோர் அலிபிரி சோதனைச்சாவடியை கடக்கும் முன், 48 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததற்கான ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ், கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு வந்து அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும். மேற்கண்ட சான்றிதழ்களை காண்பித்தவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்லவும், ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story