புதுச்சேரிக்கு வந்த 2 ரோந்து கப்பல்கள் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்


புதுச்சேரிக்கு வந்த 2 ரோந்து கப்பல்கள் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்
x
தினத்தந்தி 26 Dec 2021 4:15 AM IST (Updated: 26 Dec 2021 4:15 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரிக்கு வந்த 2 ரோந்து கப்பல்கள் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.


புதுச்சேரி, 

இந்திய ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்கவும், அதன் சிறப்புகளை கூறவும் பல்வேறு முயற்சிகள் முப்படை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முக்கிய நகரங்களில் போர் கப்பல்கள், ரோந்து கப்பல்கள் நிறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இந்திய கப்பற்படைக்கு சொந்தமான பங்காரம், பாரடங் ரோந்து ஆகிய 2 ரோந்து கப்பல்கள் புதுச்சேரி காந்தி சிலை பின்புறம் கடலில் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டன. அந்த ரோந்து கப்பல்கள் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. கடலில் நிறுத்தி வைக்கப்பட்ட 2 கப்பல்களையும் சுற்றுலா வந்திருந்தவர்களும், உள்ளூர்வாசிகளும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

Next Story