பண்ணை வீட்டில் நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்ததால் பரபரப்பு


பண்ணை வீட்டில் நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Dec 2021 2:23 PM IST (Updated: 26 Dec 2021 2:23 PM IST)
t-max-icont-min-icon

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை நேற்று இரவு விஷத்தன்மையற்ற பம்பு கடித்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் பன்வேல் பகுதியில் சல்மான்கானுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் சல்மான் கானின் பிறந்த நாள் கொண்ட்டத்தில் அவரது குடும்பத்தினர்  இந்த பண்ணை வீட்டில் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று பன்வேல் பண்ணை இல்லத்தில் வைத்து சல்மான் கானை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக கமோதேவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். 

உரிய பரிசோதனைகளுக்குப் பிறகு இன்று காலை சல்மான் கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதகாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது உடல் நிலை சீராக இருப்பதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இவ்விவகாரம் குறித்து சல்மான் கான் தரப்பிலோ அவரது குடும்பத்தினர் தரப்பிலோ எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.  பாலிவுட் திரையுலகின்   உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான சல்மான் கான் நாளை தனது 56 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். 



Next Story