முகநூலில் பெண்களுக்கு ஆபாச வீடியோ, புகைப்படம் அனுப்பி தொல்லை - ஊழியர் கைது


முகநூலில் பெண்களுக்கு ஆபாச வீடியோ, புகைப்படம் அனுப்பி தொல்லை - ஊழியர் கைது
x
தினத்தந்தி 27 Dec 2021 1:06 AM IST (Updated: 27 Dec 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 30). இவருக்கு திருமணம் முடிந்து விட்டது.

ராமநகர், 

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 30). இவருக்கு திருமணம் முடிந்து விட்டது. இவர் தனது மனைவியுடன் பெங்களூரு நந்தினி லே-அவுட்டில் வசித்து வருகிறார். மேலும் ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்தார். இந்த நிலையில் ஸ்ரீகாந்த் முகநூலில் அஞ்சலி என்ற பெயரில் ஒரு கணக்கை தொடங்கினார். அந்த முகநூல் கணக்கில் இருந்து ஏராளமான பெண்களுக்கு தன்னுடன் நண்பராக இருக்க முகநூல் மூலம் ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்து இருந்தார். அவரது அழைப்பை ஏற்றுக்கொண்ட பெண்களிடம் ஸ்ரீகாந்த் ஆபாசமாக பேசியதோடு ஆபாச புகைப்படம், வீடியோக்களை அனுப்பி வைத்து தொல்லை கொடுத்து உள்ளார். இதுபோல அவர் 20-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தொல்லை கொடுத்து வந்து உள்ளார். இந்த நிலையில் ஸ்ரீகாந்த் மீது முகநூல் மூலம் பழக்கம் ஆன ஒரு பெண் ராமநகர் சி.இ.என். போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஸ்ரீகாந்த்தை கைது செய்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story