காஷ்மீரில் பயங்கரவாதிகள் குண்டு வீச்சில் 2 போலீசார் காயம்
தெற்கு காஷ்மீர் பகுதியில் கடந்த 2 நாட்களில் 6 பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஸ்ரீநகர்,
தெற்கு காஷ்மீர் பகுதியில் கடந்த 2 நாட்களில் 6 பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இதில் பயங்கரவாதிகள் கொதிப்பு அடைந்து உள்ளனர். இதன் எதிரொலியாக நேற்று ஆயுதப்படையினர் மீது பயங்கரவாதிகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
புல்வாமா மாவட்டத்தின் வாஷ்பக் தபால்நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்தது. அங்கு மத்திய ஆயுதப்படை போலீஸ்காரர்கள் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டைக்காக குழுவாக கூடியிருந்தனர். அப்போது பிற்பகல் 3 மணி அளவில் பயங்கரவாதிகள் திடீரென ஆயுதப்படை வீரர்களை குறிவைத்து குண்டுவீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ்காரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்திருப்பதுடன், உடனடியாக பயங்கரவாதிகள் தேடும் வேட்டை முடுக்கிவிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story