பாகிஸ்தான் எல்லையில் டிரோன் மூலம் வீசப்பட்ட 40 கிலோ ஹெராயின் பறிமுதல்
எல்லை பாதுகாப்பு படையினர் ரூ.200 கோடி மதிப்பிலான 40 கிலோ ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
அமிர்தசரஸ்,
பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ரூ.200 கோடி மதிப்பிலான 40 கிலோ ஹெராயின் போதைப்பொருட்கள் கொட்டிக் கிடப்பதை கண்டறிந்தனர்.
எல்லை சோதனை சாவடிகளான மியான் வாலி உத்தர் பகுதியில் 22 பாக்கெட்டுகளில் 34 கிலோ ஹெராயின் போதைப்பொருளும் முகமதி வாலா சோதனை சாவடியில் 6 பாக்கெட்டுகளில் 6 கிலோ ஹெராயினும் சிதறிக் கிடந்துள்ளன.
முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இருந்து 11 பாக்கெட்டுகளில் 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலம் மேலிருந்து கீழே கொட்டப்பட்டிருக்கலாம் என எல்லை பாதுகாப்பு படையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.இந்த ஒரு ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 485 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.எல்லை பகுதிகளில் நிலவும் கடும் குளிர் மற்றும் அடர்த்தியான மூடுபனி சீதோஷ்ணத்தை பயன்படுத்தி தேச விரோத சக்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளன என்று எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story