"தேவைப்பட்டால் ஊரடங்கு விதிக்கலாம் " - மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் செயலாளர் அஜய் பல்லா வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரசும் ஒமைக்ரான் வைரசும் பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. கொரோனா பரவல், ஒமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளே முடிவு எடுத்து, சூழலை ஆய்வு செய்து தேவைப்பட்டால் உள்ளாட்சி அளவில், அல்லது மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவு எடுக்கலாம்.
பண்டிகைக் காலங்களில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்புதல் தடை செய்யப்படுகிறது. அனைத்து இடங்களிலும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்கப்படுத்த வேண்டும்.
பரிசோதனை, தடம் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய வழிகாட்டுதல்களை கைவிட்டு விடக்கூடாதுநாட்டில் 2022, ஜனவரி 31-ம் தேதிவரை பேரிடர் மேலாண்மைச் சட்டம் நடைமுறையில் இருப்பதால், சட்டத்தை மீறுவோர் மீது பிரிவு 51 60-ன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். ”எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story