சண்டிகார் மாநகராட்சி தேர்தல், அதிக இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி
மொத்தமுள்ள 35 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது மாநகராட்சியை கையில் வைத்துள்ள பாஜக 12 வார்டுகளை மட்டுமே கைபற்றியது.
சண்டிகார்,
பஞ்சாப் - ஹரியாணா மாநிலங்களின் பொது தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரில் மாநகராட்சி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப் பட்டது.
இதில் மொத்தமுள்ள 35 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது மாநகராட்சியை கையில் வைத்துள்ள பாஜக 12 வார்டுகளை மட்டுமே கைபற்றியது. காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அகாலி தளம் ஓரிடத்தில் வென்றுள்ளது. பாஜக சார்பில் தற்போது மேயராக உள்ள ரவி காந்த் சர்மா இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
சண்டிகார் மாநகராட்சி தேர்தலில் அதிக இடங்களை பெற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ”சண்டிகார் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றி, பஞ்சாப் தேர்தல் வெற்றியின் முன்னோட்டம்” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story