நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 142.38 கோடி
நாட்டில் இதுவரை மொத்தம் 142.38 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் இதுவரை மொத்தம் 142.38 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி எண்ணிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
இன்று இரவு 7 மணி வரை ஒரே நாளில் 65,20,037 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இரவு வரை செலுத்தப்படவுள்ள தடுப்பூசிகளின் முழுமையான தரவுகள் கிடைக்கும்போது இந்த எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்கும். இதுவரை மொத்தம் 1,42,38,12,552 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 83,80,04,579. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 58,58,07,973 பேர் ஆகும்.
15-18 வயதுடைய சிறுவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், இணை நோய் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முறையே ஜனவரி 3 மற்றும் 10 முதல் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
Related Tags :
Next Story