பகலில் அரசியல் கட்சி பேரணி: இரவுநேர ஊரடங்கில் என்ன பயன்? வருண்காந்தி கேள்வி


பகலில் அரசியல் கட்சி பேரணி:  இரவுநேர ஊரடங்கில் என்ன பயன்? வருண்காந்தி கேள்வி
x
தினத்தந்தி 28 Dec 2021 12:13 AM IST (Updated: 28 Dec 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

லக்னோ, 

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் உத்தரபிரதேசத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார்.

விரைவில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ள அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தொடர்ந்து பேரணிகளையும், பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகின்றன. இதில் லட்சக்கணக்கானவர்கள் திரண்டு வருவதால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து பா.ஜ.க. எம்.பி. வருண்காந்தி கூறுகையில், ‘பகல் நேரத்தில் நடைபெறும் அரசியல் கட்சி பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுகிறார்கள். அதே சமயம் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் என்ன பயன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story