சாதாரண பிரச்சினை: கார் டிரைவரின் உதட்டை கடித்து துப்பிய நபரால் பரபரப்பு
சந்தோஷ், ராஜேஷ், ஈசுவரப்பா தங்களது அறையில் ஒன்றாக படுத்திருந்தார்கள். அப்போது ஈசுவரப்பா மீது ராஜேஷ் தண்ணீரை ஊற்றியதாக தெரிகிறது.
பெங்களூரு,
பெங்களூரு சஞ்சய்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணா, தொழில்அதிபர். இவரிடம் சந்தோஷ் (வயது 31) என்பவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கிருஷ்ணாவின் உதவியாளராக பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் ஷியாம் (30) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இதுதவிர தொழிலாளியாக ஈசுவரப்பா என்பவரும் கிருஷ்ணா வீட்டில் வேலை செய்கிறார். இவர்கள் 3 பேரும் கிருஷ்ணா வீட்டிலேயே ஒரு அறையில் தங்கி இருந்தார்கள். இந்த நிலையில், சந்தோஷ், ராஜேஷ், ஈசுவரப்பா தங்களது அறையில் ஒன்றாக படுத்திருந்தார்கள். அப்போது ஈசுவரப்பா மீது ராஜேஷ் தண்ணீரை ஊற்றியதாக தெரிகிறது. அந்த தண்ணீர் சந்தோஷ் மீதும் பட்டு இருக்கிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது 2 பேரும் கட்டி பிடித்து உருண்டு சண்டை போட்டுள்ளனர். இந்த நிலயல் திடீரென்று சந்தோசின் உதட்டை பிடித்து ராஜேஷ் கடித்துள்ளார். இதில், அவரது உதடு துண்டாகி ரத்தம் வந்துள்ளது. அந்த உதட்டை துப்பி விட்டு, ராஜேஷ் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர் சந்தோசை மீட்டு ஈசுவரப்பா ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சஞ்சய்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருந்த ராஜேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story